Home / விளையாட்டு /

சென்னை லீக் கால்பந்து: ஏஜிஓஆர்சி, ஈகிள்ஸ் வெற்றி

Posted On : March 4, 2017

செயின்ட் ஜோசப் குழுமம்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிஷன் லீக் முதல் ஆட்டத்தில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியைத் தோற்கடித்தது. ஏஜிஓஆர்சி தரப்பில் தேஜாய் (22-ஆவது நிமிடம்), வினோத் குமார் (78) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் தரப்பில் விட்டாலிஸ் 58-ஆவது நிமிடத்தில் கோலடித்தார். ஏஜிஓஆர்சி வீரர் வினோத் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு ஆட்டத்தில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி. அணியைத் தோற்கடித்தது. ஈகிள்ஸ் வீரர் ஷமாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஆட்டம் எதுவும் கிடையாது. திங்கள்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி, வருமான வரித்துறையுடனும், ஏஜிஓஆர்சி அணி, ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணியுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் முறையே பிற்பகல் 3 மற்றும் மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்