Home / உலகம் / தொழில்நுட்பம் /

ஜியோ போட்டியை சமாளிக்க அதிரடி யூகம் வகுக்கும் ஏர்டெல்

Posted On : March 4, 2017

தேசிய ரோமிங்கின் போது இன்கமிங் அழைப்புகள், எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது. எனினும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கு பிரீமியம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூடுதல் டேட்டா கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாது என இது குறித்து வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவையை ஆக்டிவேட் செய்வது மற்றும் பில்லிங் உள்ளிட்டவற்றில் எளிமையாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல்களுக்கு ஏர்டெல் சார்பில் எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி போட்டி நிறுவனங்களும் தங்களது வாடிக்கைாயளர்களை கவர புதிய திட்டங்களை தொடர்ந்து அறிவித்து, வழங்கியும் வருகின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்