Home / உலகம் / ஜேர்மனி /

ஜேர்மனிய ஊடகவியலாளரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted On : March 4, 2017

துருக்கியில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மனிய ஊடகவியலாளரின் விடுதலையை வலியுறுத்தி, ஊடகவியலாளர்களும், ஜேர்மன் மக்களும் தலைநகரில் கைக்கோர்த்துள்ளனர்.
மிகவும் புத்திசாலியான மற்றும் யாருக்கும் அஞ்சாத ஒரு தகுதிவாய்ந்த ஊடகவியலாளரை கைதுசெய்து இவ்வாறு 13 நாட்களாக சிறையில் அடைத்துள்ளமையானது மிகவும் கொடூரமான செயலாகும் என பத்திரிகை நிறுவனமொன்றின் செய்தி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது சிறைவாசத்தை நீடிக்க சக ஊடக நண்பர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும், அந்தவகையிலேயே இன்றைய தினம் இவ்வாறு கூடியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள டெனிஸ் யுசெல் என அழைக்கப்படும் ஜேர்மனிய ஊடகவியலாளருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்