Home / விளையாட்டு /

டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! முகுந்த் டக் அவுட்!

Posted On : March 4, 2017

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த கோலி தலைமையிலான இந்திய அணி, புணே டெஸ்டில் மிக மோசமாக தோற்றதால், 2-ஆவது டெஸ்டின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ, முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில இந்தியாவை சந்திக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முரளி விஜய், ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக முகுந்த், கருண் நாயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகுந்த் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்