Home / பல்சுவை / மருத்துவம் /

தாங்க முடியாத மூட்டு வலியா?

Posted On : March 4, 2017

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாதது. இந்த சத்துக்கள் குறைவதால் எலும்புகள் தேய்மானம், மூட்டு வலிகள் ஏற்படுகிறது.
எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூட்டுவலி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மூட்டு வலியை போக்க என்ன செய்ய வேண்டும்?
செரிமான மண்டலம் எலும்பு மற்றும் மூட்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதால், அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் ஆலோசனைகளின் படி, விட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறந்த மாத்திரைகளை வாங்கி கட்டாயம் சாப்பிட வேண்டும்.
தினமும் தவறாமல் குறைந்தது 1 டம்ளர் அளவு பாலைக் குடிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பாலில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
ஆரோக்கியமான எலும்புகளை பாதுகாக்க தினமும் சைக்கிளிங், நீச்சல் போன்ற மூட்டுக்களைப் பாதிக்காத உடற்பயிற்சி மற்றும் அதிகப்படியான நீர் குடித்தல் இது போன்ற செயல்களை தவறாமல் செய்ய வேண்டும்.
குறிப்பு
மூட்டுக்களில் வலி அல்லது காயங்கள் இருந்தால், அது முற்றிலும் குணமாகும் வரை கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Comments

தொடர்புடைய செய்திகள்