Home / விளையாட்டு /

துபை ஓபன்: இறுதிச்சுற்றில் போபண்ணா ஜோடி

Posted On : March 4, 2017

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-போலந்தின் மார்ஸின் மட்கோவ்ஸ்கி ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போபண்ணா-மட்கோவ்ஸ்கி ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-3, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்பெயினின் கார்ஸியா லோபஸ் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த சீசனில் சென்னை ஓபனுக்குப் பிறகு துபை ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் போபண்ணா. இந்த சீசனின் தொடக்கத்தில் ஜீவன் நெடுஞ்செழியனுடன் இணைந்து சென்னை ஓபனில் பட்டம் வென்றார் போபண்ணா.

Comments

தொடர்புடைய செய்திகள்