Home / சினிமா / இந்திய சினிமா /

பாவனாவை இதுக்காகத்தான் கடத்தினேன்!

Posted On : March 4, 2017

தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. இவர் கடந்த வெள்ளியன்று Angamaly பகுதியில் ஷூட்டிங் முடித்து திரும்பியபோது இவருடைய காரை வழிமறித்து சிலர் இவரை கடத்தி சென்றுள்ளனர்.
கடத்தியவர்களில் ஒருவர் இவருடைய முன்னாள் டிரைவர் சுனில் என்பதும் அவருடைய வழிநடத்திலின் படியே பாவனா கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சுனில் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தில் “பாவனாவிடம் நிறைய பணம் இருப்பது எனக்கு தெரிந்தது. அவரை கடத்தி பணம் பறிக்கவே இதை செய்தேன். அந்த பணத்தை வைத்து என் காதலியுடன் ஜாலியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் மாட்டிக் கொண்டோம்” என கூறியுள்ளார். மேலும் இதில் பெரும்புள்ளிகள் யாரும் சம்பந்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்