Home / உலகம் / கனடா /

பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண் மீது பேருந்து மோதி பலி

Posted On : March 4, 2017

கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் முக்கிய பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து பணிமனை உள்ளது. இங்கு சில தினங்களுக்கு முன்னர் மாலை 6.30 மணியவில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரருகில் வேகமாக வந்த ஒரு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதில் இளம் பெண் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
அந்த பெண்ணின் பெயர் மற்றும் இதர விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், அவர் மீது மோதிய பேருந்தின் முன் பக்கத்தில் இருக்கும் கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கவுள்ளனர்

Comments

தொடர்புடைய செய்திகள்