Home / உலகம் / தொழில்நுட்பம் /

2ஜி வேகத்திலும் வீடியோ கால் செய்ய முடியும்

Posted On : March 4, 2017

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஸ்கைப் லைட் செயலியை டவுன்லோடு செய்ய முடியும். 13 எம்பி அளவு கொண்ட ஸ்கைப் லைட் செயலி மற்ற எஸ்எம்எஸ் மற்றும் கான்வெர்சேஷன்களை ஒரே டேபில் இயக்க முடியும். இது தவிர டயலர், காண்டாக்ட் மற்றும் பாட் உள்ளிட்ட டேப்களும் இருக்கின்றன.

செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம். ஏற்கனவே வாட்ஸ்அப், ஹைக் உள்ளிட்ட செயலிகள் பெரும்பலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய ஸ்கைப் லைட் பதிப்பு 2ஜி கனெக்ஷனிலும் சீராக இயங்கும் என்பதால் இந்தியாவில் இந்த செயலி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments

தொடர்புடைய செய்திகள்