Home / உலகம் / கனடா /

கனடாவுக்கு கடும் எச்சரிக்கை

Posted On : March 6, 2017

கனடாவில் பனிப்பொழிவு மற்றும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், கனடாவின் மாநிடோபா மாகாணத்தில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு அமெரிக்காவில் உருவாகும் இந்த புயல் கடைசியாக வடமேற்கு ஒண்டாரியோவில் கரையை கடக்கும். இந்த சமயத்தில் மாநிடோபாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் எனவும் மழையும் அதிகளவில் பொழியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு மாநிடோபாவில் 10 செண்டிமீற்றரிலிருந்து 30 செண்டிமீற்றர் வரை பனிப்பொழிவின் தாக்கம் உச்சமாக இருக்கும். அதே போல சூறாவளி காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்