Home / உலகம் / சுவிஸ் /

கார் ஓட்டியபோது திடீர் மாரடைப்பு: பரிதாபமாக பலியான பெண்

Posted On : March 6, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் கார் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் உரி மாகாணத்தை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர் நிட்வல்தேன் மாகாணத்திற்கு நேற்று காலை காரில் புறப்பட்டுள்ளார்.

நீண்ட பயணத்திற்கு பிறகு கார் சீலிஸ்பேர்க் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் சென்றுள்ளது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் சாலையில் பாய்ந்துள்ளது. தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்ற அந்த கார் பாலம் மீது மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் காரை ஓட்டிய அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனால் சாலை சில மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் மருத்துவர்கள் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்விபத்து குறித்து பொலிசார் பேசியபோது கார் ஓட்டியபோது பெண்ணிற்கு மாரடைப்பு போன்ற திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுருக்கலாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்