Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

திருமணத்திற்கு விடுப்பு அளிக்க மறுப்பு: இளம் ரயில்வே போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Posted On : March 6, 2017

திருமணத்திற்கு போதுமான அளவு விடுமுறை தராததால், மனமுடைந்த இளம் ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) தனது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பை செண்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் தல்வீர் சிங். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் தன் பாதுகாப்பு பணி மேலாளரிடம் திருமணத்திற்காக விடுமுறையை கேட்டிருந்தார். விடுமுறை கொடுப்பது பற்றி எந்த பேச்சும் எடுக்காமல் இழுத்துக்கொண்டிருந்த மேலாளர், கடைசியில் திருமணத்திற்கு 5 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் குஜராத் எக்ஸ்பிரஸ் 12901 ரயிலின் பாதுகாப்பு பணிக்கு புறப்படுவதற்கு முன்பு, பணி கட்டுப்பாட்டு அறையின் நாற்காலியில் உட்காருந்து கொண்டு குடும்பத்தினருடன் மிக மனமுடைந்து நிலையில் பேசிக்கொண்டிருந்த தல்வீர், அப்போது, தன் தோளில் தொங்க விட்டிருந்த ரயில்வேயால் கொடுக்கப்பட்ட ஏகே 47 துப்பாக்கியால் ட்ரிகரை அழுத்தியுள்ளார். அப்போது துப்பாக்கியின் குண்டு தல்வீரின் மார்பில் பாய்ந்து அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து அவசர அவசரமாக தல்வீரை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தல்வீர் சிங் தற்கொலை குறித்து மும்பை மத்திய ரயில்வே போலீஸ், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-ன் கீழ் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு குறித்து GRP துணை போலீஸ் கமிஷனர் தீபக் தியோராஜ் விசாரணையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், ரயில்வே போலீஸார், ஊழியர்கள் மீண்டும் மீண்டும் உயர் அழுத்த நிலைக்கு ஆளாக்கப்படுவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், தல்வீர் சிங்கின் மரணம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்