Home / உலகம் / ஐரோப்பா /

தெற்கு இத்தாலியில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த முகாமில் தீ: இருவர் உயிரிழப்பு

Posted On : March 6, 2017

குறித்த விபத்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் தீ விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ஒருவர், “இத்தாலியின் பல்கியா பிராந்தியத்தில் உள்ள பிக் கெட்டோ (Big Ghetto) என அழைக்கப்படும் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் உடற்கருகி உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட இத்தாலிய ஊடகம் ஒன்று, 33 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த  தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்