Home / உலகம் / நார்வே /

நோர்வே கப்பல் விபத்தில் 11 பிரித்தானியர்கள் காயம்

Posted On : March 6, 2017

சுற்றுலாப்பயணிகள் பயணித்த இரு கப்பல்கள் நீருற்று ஒன்றுக்கு அருகில் பயணிக்கும் போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் ஒருவர், “இந்த விபத்தில் காயமுற்றுள்ள பயணிகள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தை நேரில் பார்வையுற்றவர்களிடம் நாம் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

குறித்த இரு கப்பல்களிலும் மொத்தமாக 24 பேர் பயணித்ததாகவும் அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேர் பிரித்தானியர்கள் எனவும் இந்த விபத்து தொடர்பில் செய்தி வெளியிட்ட உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்