Home / உலகம் / பிரான்ஸ் /

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் மாரின் லீ பென்னுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு நீக்கம்

Posted On : March 6, 2017

பிரான்ஸ் வலது சாரி கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மாரின் லீ பென்னுக்கு, சட்ட விசாரணைகளிலிருந்து விதிவிலக்கைப்பெற அளிக்கப்பட்டிருந்த சட்ட ரீதியான பாதுகாப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் நீக்கியுள்ளது.

இது தொடர்பில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் செயற்பாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் திமித்றியஸ் பபடிமோலிஸ் தெரிவிக்கையில்,

மாரின் லீ பென்னுக்கு விசாரணைக்குட்படுத்துவதிலிருந்து விதிவிலக்களிக்கும் வகையில் வழங்கப்பட்ட சட்ட ரீதியான பாதுகாப்பை நீக்க நாடாளுமனற உறுப்பினர்களில் பெரும்பான்மையானொர் வாக்களித்துள்ளதாக கூறினார்.

சட்ட ரீதியான பாதுகாப்பை நீக்கியதன் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர சித்திரவதைகளை வெளிப்படுத்தும் வகையில் அவரால் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த போலியான படங்கள் தொடர்பில், அவரை பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்துவது உறுதியாகியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்