Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் பலி

Posted On : March 7, 2017

இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதாம்பாலம் பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், தங்கச்சிமடம் ஐயன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் மூர்க்கத்தனமான செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்குவதையும், அவர்களை சிறைபிடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினர், தற்போது உயிரைப் பறிக்கும் அளவிற்கு மூர்க்கத்தனமான செயலுக்கும் சென்றுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்