Home / சினிமா / இந்திய சினிமா /

ஐ.நாவில் ஐஸ்வர்யா நடனம்

Posted On : March 7, 2017

நியூயார்க்கில் 190 நாடுகள் உள்ளடங்கிய ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமை பெறுகிறார் ஐஸ்வர்யா தனுஷ். கடந்த ஆண்டு இவர் ஐ.நாவின் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 8ம் தேதி உலக மகளிர் தினம். அதை விமரிசையாக கொண்டாடும் வகையிலும், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் ஐ.நா.வில் பரத நாட்டியம் ஆட உள்ளார்.

45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் நடராஜருக்கு புஷ்பாஞ்சலி தொடங்கி, மதுரை மீனாட்சி வாழ்க்கை, வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பெண்கள் பணிக்கு செல்லும் மேன்மை போன்றவற்றை நாட்டியத்தின் மூலம் நடித்து காட்டுகிறார். முடிவில் காஞ்சி பெரியவர் எழுதிய மைத்ரிம் பஜத பாடலுடன் உலக சமாதானம் வேண்டி நடனம் ஆடி நிறைவு செய்கிறார். இது எம்.எஸ்.சுப்புலட்சுமியால் ஐ.நா சபையில் முதன்முறையாக முன்பு பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்