Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுமி உள்ளிட்ட ஒருவர் கொலை!

Posted On : March 7, 2017

தெரணியகல – மாகல பகுதியில் ஏழு வயது சிறுமி ஒருவரும், 45 வயதுடைய நபர் ஒருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான குறித்த சிறுமியின் தாய், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர், தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்