Home / விளையாட்டு /

டேவிஸ் கோப்பை: இந்திய அணியில் பயஸ்

Posted On : March 7, 2017

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய-ஓசியானியா குரூப்-1 இரண்டாவது சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் இடம்பெற்றுள்ளார். எனினும் அவர், இறுதியாக களமிறங்கும் நால்வரில் ஒருவராக இடம்பெறுவாரா என்பதை அணியின் புதிய ’நான் பிளேயிங்’ கேப்டனான மகேஷ் பூபதியே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்