Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

தமிழகத்தில் 100 % நச்சுத்தன்மை இல்லாத குளிர்பானங்கள் விற்கும் நிலை உருவாகும்: விக்கிரமராஜா உறுதி

Posted On : March 7, 2017

நூறு சதவீதம் நச்சுத்தன்மை இல்லாத குளிர்பானங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிதாக நெல்லை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசுகளின் சட்டப் பிரச்னைகளை வியாபாரிகள் எதிர்கொள்ளவும், மே வணிகர் தினத்தன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெறும் 34 ஆவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்களைத் திரட்டவும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

மேலும் நச்சுத்தன்மை உள்ள பெப்சி, கோக் குளிர்பானங்களை மார்ச் 1க்குள் வியாபாரிகள் விற்கமாட்டார்கள் எனக் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் 70 சதவீத வியாபாரிகள் மனமுவந்து அதனை ஏற்றுக் கொண்டார்கள். மற்ற வியாபாரிகள் குளிர்சாதனப் பெட்டி வைத்திருக்கின்ற காரணத்தால்,அதை அகற்றக் கூடிய பணியாக இன்னும் 20 நாளுக்குப் பிறகு உள்நாட்டு நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அவர்கள் மூலம் முதல்கட்டமாக ஏறத்தாழ 10 ஆயிரம் குளிர்சாதனப் பெட்டிகளை வியாபாரிகளுக்கு வழங்குகிறோம். அது வழங்கத் தொடங்கிய பிறகு 100 சதவீதம் நச்சுத்தன்மை இல்லாத குளிர்பானங்களை மட்டுமே விற்கும் மாநிலமாக தமிழகமாக மாறும்.

மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் சிறுவியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை கடன் வழங்குகிறது. எந்தவித ஆவணமும் இல்லாமல் இத் திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். சிறு வியாபாரிகள் இந்தக் கடன்களை கிடைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக பாடுபடும் என்றார் அவர்.

Comments

தொடர்புடைய செய்திகள்