Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு போலீசார் அனுமதி

Posted On : March 7, 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8-ம் தேதி முதல் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே 8-ம் தேதி மேற்கொள்ள இருக்கும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி பன்னீர் செல்வம் அணி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போலீசாரிடம் மனு அளித்த்திருந்தார். இந்நிலையில் மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்