Home / விளையாட்டு /

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி – தொடரை கைப்பற்றியது

Posted On : March 7, 2017

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோரூட், வோக்ஸ் சிறப்பாக ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 45 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாலில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 224 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேசன் முகமது 30 ரன்னும், கிரேக் பிராத்வெயிட் 42 ரன்னும் எடுத்தனர். பிரென் கெட் 3 விக்கெட்டும், ஸ்டீவன்பின், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. 25-வது ஓவரில் 124 ரன் எடுப்பதற்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 7-வது விக்கெட்டான ஜோரூட் வோக்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோரூட் 127 பந்தில் 90 ரன்னும் (3 பவுண்டரி), வோக்ஸ் 92 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்லேநர்ஸ் 3 விக்கெட்டும், தேவேத்திர பிஷு 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 9-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் நடக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்