Home / சினிமா /

வைக்கம் விஜயலட்சுமி வீணையை 5 மணிநேரம் இசைத்து உலக சாதனை!

Posted On : March 7, 2017

பிரபல பார்வையற்ற மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தொடர்ந்து 5 மணி நேரம் காயத்திரி வீணையில் பாடல் இசைத்து உலக சாதனை படைத்துள்ளார். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.

பார்வையற்ற இவர் முதல் பாடலிலேயே (காற்றே… காற்றே… என்ற பாடல்) கேரள அரசின் விருதை பெற்றார். அடுத்த ஆண்டே ஜெயராம் நடித்த ‘நாயகன்’ என்ற படத்தில் பாடியதும் கேரள அரசின் விருதை பெற்றுக் கொடுத்தது. இவர் தமிழிலும் ஒரு பாடல் பாடியுள்ளார். மோகன்லால் நடிப்பில் ஹிட்டான ‘புலி முருகன்’ என்ற படத்திலும் பாடல் பாடியுள்ளார்.

இவருக்கு சந்தோஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாட்டால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

பாடகி விஜயலட்சுமி காயத்திரி வீணை வாசிப்பதில் திறமை பெற்றவர். இவர் காயத்திரி வீணை வாசிப்பதில் உலக சாதனை படைக்க திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று கொச்சியில் ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து 5 மணி நேரம் காயத்திரி வீணையில் 67 பாடல்கள் இசைத்து உலக சாதனை படைத்துள்ளார். விரைவில் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்