Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

அனைத்து ரேஷன் கடைகள் முன்பு வரும் 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

Posted On : March 8, 2017

உணவுப் பொருள்கள் முறையாக வழங்காத அதிமுக அரசைக் கண்டித்து அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு வரும் 13ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பொருள்கள் முறையாக வழங்காத அதிமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு 13-3-2017, திங்கட்கிழமை அன்று ‘‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்திட வேண்டுமென செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 7.3.2017 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் – பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள – ஒவ்வொரு ரேஷன் கடைகளின் முன்பும் ‘‘கண்டன ஆர்ப்பாட்டத்தை” நடத்திட வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த ரேஷன் கடைகள் உள்ள தெருக்களில் அல்லது அந்தப் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்