Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அவுஸ்திரேலியாவில் பால் பாகுபாட்டைக் களைய ‘வித்தியாசமான’ முயற்சி!

Posted On : March 8, 2017

அவுஸ்திரேலியாவில், பாலின பேதத்தைக் களையும் விதத்தில் பெண்களை உருவகப்படுத்தி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

பொதுச் சேவைகளில் அறியாமலேயே இடம்பெறும் பாலினப் பாகுபாடுகளைக் களையும் முயற்சியில் அவுஸ்திரேலியா இறங்கியுள்ளது. அதில் ஒரு படியாக, மெல்பேர்னில் உள்ள பத்து போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பெண்களின் உருவங்கள் ஒளிரத் தொடங்கியுள்ளன. எனினும் இது கலப்பு விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பால்பாகுபாடுகளைக் களையும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றும், இதன்மூலம் எதிர்காலத்தில் அனைத்து தீர்மானங்களின்போதும் பெண்களின் பிரசன்னமும் உணரப்படும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மறுபுறம், இதுபோன்ற அனாவசியச் செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்கள் எந்தவிதத்திலும் பயனளிக்கப்போவதில்லை என்றும், பெண்கள் இதை ஒரு பாகுபாடாக நினைக்கப்போவதில்லை என்றும், இல்லாத ஒன்றை பூதாகாரமாக மாற்றியிருப்பதன் மூலம் அனாவசிய பிரச்சினைகளின் பால் மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்