Home / விளையாட்டு /

இணைந்த கைகள்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா முதலிடம்!

Posted On : March 8, 2017

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை. ஜடேஜா முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் இரு நெ.1 பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளார்கள். பேட்டிங்கில் விராட் கோலி மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸி. கேப்டன் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார்.  அதேபோல ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்