Home / விளையாட்டு /

இந்தியாவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை

Posted On : March 8, 2017

பெங்களூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் மட்டும் அவர் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்ஸில் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி வருகிறார். ஸ்டார்க் அவருடைய 4-வது விக்கெட்டாகும்.

வெளிநாடுகளில் விளையாடிய 17 டெஸ்டுகளில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். ஒட்டுமொத்தமாக இதுவரை விளையாடிய 47 டெஸ்டுகளில் 267 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவற்றில் 200 விக்கெட்டுகளை இந்தியாவில் எடுத்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்