Home / உலகம் / கனடா /

கனடாவில் தலைதூக்கும் ஸிகா வைரஸ்

Posted On : March 8, 2017

தென்அமெரிக்கா நாடுகளில் கடந்த ஆண்டுகளில் வேகமாக பரவிய ஸிகா வைரஸ் நோய், கனேடிய பயணிகளில் சிலரை தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனேடிய மருத்துவ சங்கம் இதழ் வெளியிட்ட புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓக்டோபர் மாதம் 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் காலப்பகுதியில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய மற்றும் கனடா பூராகவும் உள்ள நகர்ப்புற மைய மருத்துவ மையங்களிற்கு சென்றவர்கள் உட்பட்ட 1,118 பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 1,118 பயணிகளில் 3.7 சதவிகிதமானவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று கர்ப்பிணிகள் உள்ளடங்களாக 24 பேர் பெண்கள் மற்றும் 19 சிறுபிள்ளைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்