பாடசாலை மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் பிரலபல பாடசாலையில் உள்ள மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனிஷ்ட மாணவத் தலைவர் ஒருவரையே, சிரேஷ்ட மாணவத் தலைவர் உள்ளடங்கிய குழுவினர் தாக்கியுள்ளனர். சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளான கனிஷ்ட மாணவத் தலைவர் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.