Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியாவுக்கு குடிபெயரும் மக்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாது

Posted On : March 8, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமையின் பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் மக்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாது என பிரித்தானிய நாடாளுமன்றின் மேற்சபை உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ள குடியேற்றம் தொடர்பான திட்டங்கள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படாத நிலையிலேயே மேற்குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், குடியேற்றம் தொடர்பில் கையாளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்