Home / உலகம் / பிரித்தானியா /

பொது இடத்தில் முகம் சுழிக்கும்படி நடந்துகொண்ட இளவரசர் ஹரி

Posted On : March 8, 2017

பிரித்தானிய இளவரசர் ஹரி பொது இடத்தில் வைத்து தனது காதலி மெகன் மெர்க்கல்லை கண்டுகொள்ளாமல் தனது போக்கில் நடந்துகொண்டது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இளவரசர் ஹரி, ஹாலிவுட் நடிகை மெகன் மெர்க்கல்லை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜமைக்காவில் நடைபெற்ற நண்பரின் திருமண வைபோகத்திற்கு இளவரசர் ஹரி, காதலி மெர்க்கலுடன் சென்றிருந்தார்.

திருமணம் முடிந்த, தேவாலயத்தில் வெளியில் நின்றுகொண்டிருந்தபோது, அருகில் இருக்கும் தனது காதலியை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிய வண்ணம் இருந்துள்ளார்.

அந்த இடத்தில் இவரது உடல் மொழி பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும், தேவாலய பகுதியில் நடந்துசெல்லும்போது, மெர்க்கல்லை கண்டுகொள்ளாமல் தனியாக நடந்துசென்றுள்ளார். அவரின் பின்னால் நடந்து வந்த மெர்க்கல், வேகமாக நடந்துசென்று ஹரியை நெருங்கியுள்ளார்.

ஆனால், அப்படியிருந்தும் அதனை சற்றும் பொருட்படுத்திக்கொள்ளாத ஹரி, தன்போக்கில் நடந்துசென்றுள்ளார். ஆனால் மெர்க்கல்லோ நாங்கள் இருவரும் ரொமாண்டிக் ஜோடி என்பதை காட்டிக்கொள்வதற்காக, ஹரியுடன் ஒன்று சேர்ந்து முயன்றவரை புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை.

மேலும், திருமணம் முடிந்த பின்னர் கூட, காதலியை கண்டுகொள்ளாமல் ஹரி நடந்துசென்றுள்ளார். விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்ற நிலையில், இளவரசர் ஹரியின் இந்த உடல்மொழி அங்கியிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்