Home / உலகம் / கனடா /

420 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் இருந்ததற்கான ஆதாரம் கியூபெக்கில் கண்டுபிடிப்பு!

Posted On : March 8, 2017

கனடாவின் கியூபெக் பகுதியில் 420 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் இருந்ததற்கான புதை படிமங்கள் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதை படிமம் தலைமுடியை விட அகலம் குறைவானதாக பாறைகளில் படிந்துள்ளது. இதன் மூலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, 10 கோடி ஆண்டுகள் கழித்து உயிரினங்கள் உருவாகி இருக்கலாம் என்பது இந்த புதை படிமத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பானது நமது கோள் தோன்றிய வரலாறு, பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் உயிரினங்கள் தோன்றின என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்