Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

இலங்கை மீதான நிலைப்பாட்டில் மாற்றமில்லை : ஜெனிவா மாநாட்டில் பிரித்தானியா அழுத்தம்

Posted On : March 9, 2017

இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்தவொறு மாற்றமும் இல்லை என பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையும், உறுதி மொழிகளையும் இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது தொடர்பிலான நிலைப்பாட்டிலேயே பிரித்தானியா அரசாங்கம் தொடர்ந்தும் இருக்கின்றது என ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பிரித்தானியா இதனை தொடர்ந்தும் வலியுறுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்