Home / உலகம் / பிரித்தானியா /

இஸ்ரேல் – பலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா தலையிடாது: பொரிஸ்

Posted On : March 9, 2017

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா தலையிடாது என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தலைவர்களை நேற்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பொரிஸூடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாட் அல் மல்கி, (Riad al-Malki), “பொரிஸூடனான பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது. சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த சந்திப்பினைத் தொடர்ந்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸினையும் பொரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்