Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கரையோர கண்காணிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை கடற்படை!

Posted On : March 9, 2017

இலங்கையின் வடக்கு கரையோர பகுதிகளின் கண்காணிப்பு நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

அண்மையில் தமிழக கடற்தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இன்னிலையில் இந்த படுகொலைக்கும் இலங்கை கடற்படைக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடல்பகுதி ஊடாக தென்னிலங்கையில் இருந்து போதைப்பொருட் கடத்தல் இடம்பெற்று வருகின்றதாக இலங்கை கடற்படையினர் கடல் கண்காணிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளார்.

தமிழக கடற்தொழிலாளர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை மீது இந்தியாவில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்.
இலங்கை கடற்படையினர் மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு திருகோணமலை வரையான கடற் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

Comments

தொடர்புடைய செய்திகள்