Home / உலகம் / கனடா /

குடியுரிமை பறிக்கப்பட கனேடியர்கள் இனி மேன்முறையீடு செய்யலாம்?

Posted On : March 9, 2017

குடியுரிமை பறிக்கப்பட கனேடியர்கள் மேன்முறையீடு செய்யக்கூடிய வகையிலான சட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் இறங்கியுள்ளார்.

குடியுரிமை சட்டமூலம் C-6 (Bill C-6) இற்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக, குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் ஏற்கனவே கூறிய கருத்துக்களை கருத்திற்கொண்டு குறித்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த தான் ஆராய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், முன்னைய பழமைவாத அரசினால் நிறைவேற்றப்பட்ட சில சரத்துக்கள் நீக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குற்றச்செயல்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் என பழமைவாத அரசு சட்டம் நிறைவேற்றி இருந்தது. குறிப்பாக இந்த சட்டம் வலுவிழக்கும் எனவும் கூறப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்