Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கொழும்பு பல்லைக்கழக கலைப் பீடத்தில் மாணவர்கள் நுளை தடை!

Posted On : March 9, 2017

கொழும்பு பல்லைக்கழக கலைப் பீடத்தின் 2 ஆம் 3 ஆம், 4 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்று (08) இடம்பெற்ற மோதலை அடுத்து, குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி அதுல ரணசிங்க தெரிவித்தார்.

குறித்த மோதலில் மாணவர்கள் நால்வர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குரிய, பொரளைள ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள மாணவர் விடுதியில் வைத்தே, குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, அதனையடுத்து மாணவர்ளை அங்கிருந்து செல்லுமாறு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்