Home / உலகம் / ஐரோப்பா /

ஜேர்மனியை உளவு பார்க்கின்றது துருக்கி: ஜேர்மனி குற்றச்சாட்டு

Posted On : March 9, 2017

ஜேர்மனியை துருக்கி உளவு பார்க்கின்றது எனவும் குறித்த நடவடிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது எனவும் ஜேர்மனிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த கருத்தை ஜேர்மனிய அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் துருக்கியில் நடத்தப்படவுள்ள கருத்துக்கணிப்பு தொடர்பில் ஜேர்மனியில் உள்ள துருக்கி நாட்டவர்களுக்கு இடையில் பதற்ற நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே ஜேர்மனியை துருக்கி உளவு பார்க்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரங்களை கையளிப்பது தொடர்பில் எதிர்வரும் மாதம் கருத்துக்கணிப்பு நடைபெறவுள்ள நிலையில்,  துருக்கி இன மக்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அதன் பிரதிபலிப்பை ஜேர்மனியிலும் காணக்கூடியதாக உள்ளது எனவும் ஜேர்மனியின் உள்ளூர் புலனாய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

துருக்கியில் கடந்த வருடம் முறியடிக்கப்பட்ட ராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து துருக்கியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜேர்மனி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஜேர்மனி மற்றும் துருக்கியின் உறவில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இந்நிலையில் துருக்கியின் அமைச்சர்கள் சிலர் அண்மையில் ஜேர்மனியில் உரையாற்றவிருந்த போது அது ரத்து செய்யப்பட்டமை குறித்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களை மேலும் அதிகரித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்