Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

தம்புள்ள மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட் ஊசி விசாரணை!

Posted On : March 9, 2017

தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு வலியுறுத்தி தென்னிலங்கையின் பேரினவாத அமைப்புக்களில் ஒன்றான சிங்ஹல ராவய அமைப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளது.

குறித்த அமைப்பு இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளது.

தம்புள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த தாய்மார் சிலருக்கு பலாத்காரமான முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முயற்சித்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த தாய்மாரின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரச வைத்தியசாலையில் வைத்தியர்களின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்