Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

திருகோணமலையில் காதலியை அழைத்துகொண்டு சென்றவர் விளக்கமறியலில்!

Posted On : March 9, 2017

திருகோணமலை குச்சவெளிபகுதியில் 14 அகவையுடைய சிறுமியை காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துக்கொண்டு சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குச்சவெளிபகுதியினை சேந்த 18 அகவையுடைய இளைஞன் குறித்த சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் இன்னிலையில் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை கொக்கிளாய் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கவைத்துள்ளார்.

இன்னிலையில் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை காணாமை தொடர்பில் பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள்

இதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்