Home / உலகம் / ஐரோப்பா /

நெதர்லாந்தில் உள்ள துருக்கி தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்

Posted On : March 9, 2017

நெதர்லாந்தில் உள்ள துருக்கி தூதரகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டச்சு இன தேசியவாதியான கிறீட் வில்டர்ஸின் (Geert Wilders) தலைமையில் நேற்று (புதன்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் ஈடுபட்டவர்கள் ‘எர்டோகன் ஒரு சர்வாதிகாரி’ என கோஷமிட்டபடி ஆர்ப்பரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் துருக்கியில் நடத்தப்படவுள்ள கருத்துக்கணிப்பிற்கு நெதர்லாந்தில் உள்ள துருக்கி மக்களின் ஆதவை பெறும் பொருட்டு பேரணிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த வில்டர்ஸ், “துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளு, ஹோலன்ட் பிராந்தியத்திற்கு வருகை தந்து கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். சர்வாதிகாரி எர்டோனுக்கு விரிவான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலேயே குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. நாங்கள் அதை அனுமதிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்