Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

படையினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஜ.நாவில் சாட்சியமளித்த அனந்தி சசிதரன்!

Posted On : March 9, 2017

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது வேதனையை தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கமும் சரி சர்வதேசமும் சரி இதுவரை எந்தவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை ஆனால் இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுக கால நீடிப்பை ஜ.நா வழங்கவுள்ளமை தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைகின்றோம்.

ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானத்தில் இன்றுவரையும் எந்த ஒரு விடயத்தையும் நிறைவேற்றி கொள்ளவில்லை இதனை நாங்கள் மிக ஆணைத்தரமாக தெரிவித்துள்ளோம் இந்த கால நீடிப்பு என்பது எமக்கு வேதனையினை தருகின்றது.

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் கூட எந்த வொரு துரும்பைக்கூட அசைக்கமுடியாத நிலையில் இருக்கின்றது.

அந்த அலுவலகம் இதுவரை நிறுவக்கூடவில்லை இன்று வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள் இதற்கு கூட அரசாங்கம் ஆக்கபூர்;வமான கருத்தினை முன்வைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம் என்று ஜெனீவாவில் வைத்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்