Home / உலகம் / தொழில்நுட்பம் /

பேஸ்புக் 360 ஆப் வெளியீடு: முழு தகவல்கள்

Posted On : March 9, 2017
பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.
கியர் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்ய கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி கொண்ட சாம்சங் சாதனத்தில் ஆகுலஸ் செயலியில் புதிய பேஸ்புக் 360 செயலியை தேடலாம். இதோடு ஆகுலஸ் இணையதளத்திலும் புதிய பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்யலாம்.
புதிய பேஸ்புக் 360 செயலியை கொண்டு பேஸ்புக்கில் கிடைக்கும் ஏராளமான 360 டிகிரி தரவுகளை ஆராய்ந்து பார்க்க முடியும். நண்பர்கள் மற்றும் இதர பக்கங்களை இயக்கி, 360 டிகிரி தரவுகளை பின்னர் பார்ப்பதற்கும் சேமித்து கொள்ளலாம். பேஸ்புக் 360 செயலியை கொண்டு 360 டிகிரி புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ரியாக்ஷன் வழங்க முடியும். இதோடு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்