Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

முல்லைத்தீவில் ஊழல் மேசடி செய்ய சுகாதர பணிப்பாளர் மீண்டும் நியமனம்!

Posted On : March 9, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராக இருந்த காலத்தில் பல்வேறு பணமோசடி மற்றும ஊழல் மோசடிகள் செய்ய அதிகாரி ஒருவரை மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்;திற்கு நியமனம் செய்துள்ளமையினை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆதாரபூர்வமாக மாகாண சபையில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார திணைக்கழத்தின் முன்னாள் தலைவர் அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கடமைக்காலத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆரம்பத்தில் திணைக்கள வாரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மத்திய சுகாதார திணைக்கழத்திற்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.

இன்னிலையில் குறிப்பிட்ட முன்னாள் பிராந்திய சுகாதா சேவைகள் நிலைய பணிப்பாளர் அவர்களை மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நியமனம் செய்து பணிப்பாளர் நாயகம் சுகாதார திணைக்களத்தினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீதான விசாரணைகள் இன்னும் முடிவிற்கு வரவில்லை இன்னிலையில் நாங்கள் முன்வைக்கும் கேள்வி
ஊழல் மோசடி அல்லது நிதி மோசடி சம்மந்தமாக விசாரணைக்கு உட்பட்டிருக்கும் உத்தியோகத்தருக்கு எவ்வாறு பதவி உயர்வு வழங்கமுடியும்?
எவ்வாறு அவர் மோசடி மேற்கொண்டதாக கூறப்படும் அதே இடத்திற்கு அதே பதவிக்கு நியமிக்கமுடியும்?

ஏன் இந்த நியமனம் வழங்கும் போது மாகாணசபையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்ற கேள்விகளை வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் முன்வைத்துள்ளார்.

மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு உட்சாகம் அளிக்கவும், இவ்வாறான நடவடிக்கை சிலரின் அரசியல் செல்வாக்கினால் உருவாக்கப்படுகின்றதா? என்றும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.
இன்னிலையில் …

முல்லைத்தீவு மருத்துவமனையின் சிற்றுண்டி சாலையில் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் குணசீலன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
இதில் கூறப்பட்ட முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒன்று திருமுறுகண்டியில் கட்டப்படாத ஒரு கட்டிடம் ஒன்றினை கட்டியதாக கூறி பணம் பெற்றுக்கொண்டமை,மற்றது மல்லாவி பாலிநகர் கிராமத்தில் ஒரு கட்டிடம் ஒன்றினை திருத்தியதாக கூறி இரண்டு தடவை பணங்களை பெற்றுக்கொண்டமை, முல்லைத்தீவு மருத்துவமனைப்பகுதியில் எந்தவித நிதி ஒழுங்கினையும் கடைப்பிடிக்காமல் தன்னிச்சியாக ஒரு சிற்றுண்டி சாலையினை கட்டி தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மூன்று முக்கியமான விசாரணைகளுக்கு மேலதிகமாக 19 ஏனைய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளும் நிலுவையில் உள்ளது.

இன்னிலையில் மாகாணரீதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு விசாரணை அறிக்கைகளும் சபைக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்