Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

வடமாகாண சபையே தூங்காதே! வட மகாண சபையின் முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Posted On : March 9, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று வடமாகாணசபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வடமாகாணசபையின் 86வது அமர்வு நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக காலை 8 மணிக்கு வடமாகாணசபை முன்பாக கூடிய பட்டதாரிகள் மிக அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது அரசியல் எடுபிடிகளுக்கு அரச வேலை, பட்டதாரிகளுக்கு சுய தொழிலா?”, பட்டதாரிகள் றோட்டில் பச்சைவாளிகள் உள்ளே, வோட் உங்களுக்கு றோட் எங்களுக்கா?, “பட்டதாரிக்கு போட்டி பரீட்சை எதற்கு?” “வடமாகாண சபையே தூங்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு பட்டதாரிகள் ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதேவேளை வடமாகாணத்தில் உள்ள பட்டதாரிகளின் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்பட்டு மாகாண சபையிடம் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்