Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

வவுனியா ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி – இரு சிறுவர்கள் படுகாயம்

Posted On : March 9, 2017

வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட ஒருவரே உயரிழந்துள்ளதுடன், காயமடைந்த சிறுவர்கள் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பாலத்திலுள்ள மதவுடன் மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் 56 வயதுடைய கந்தையா மாரியாயி எனும் வயோதிப பெண்மணியே இறந்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் மகளின் பிள்ளைகளான 2 வயதான டிலானி, 7 வயதான டெனுசன் எனும் இரு சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலன் சாரதியின் நித்திரைக்கலக்கத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்