Home / சினிமா / இந்திய சினிமா /

அஜித் ரசிகர்களை தூண்டி விடுகிறாரா அமீர்? சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!

Posted On : March 10, 2017

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் வருடம் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படம் சத்யதேவ் IPS எனும் பெயரில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. கன்னடத்தில் வேற்று மொழி படங்களை டப் செய்து வெளியிடுவதற்கு சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரத்துடன் அந்த தடை நீங்கியுள்ளது.

எனினும் சிலர் தமிழ் படத்தை கன்னடத்தில் டப் செய்யக்கூடாது என தீவிரமாக போர்கொடி தூக்கி வருகிறார்கள். நடிகர்கள் வட்டல் நாகராஜ், சது கோகிலா, ஷரண், அகுல் பாலாஜி என பலரும் இதற்கு இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் வட்டல் நாகராஜ் ஒருபடி மேலே போய் ‘சத்யதேவ் IPS’ திரையிடப்படும் திரையரங்குகளுக்கு நான் தீ வைப்பேன் என அதிரடியாக கூறியிருந்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள இயக்குனர் அமீர், ” அஜீத் படத்தை கொளுத்துவேன்! கன்னட நடிகர் ஜக்கேஷ் அறிக்கை. தமிழ்நாட்டு பக்கம் வந்துராத உன்னையே கொ-த்திருவாங்க! எச்சரிக்கை” என ட்வீட் போட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்