Home / ஆன்மீகம் /

சுவிஸ் பேர்ண் தூண் ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்தி உற்சவம்

Posted On : March 10, 2017

பூவுலகில் எப்போது தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுது, தர்மத்தை நிலைநாட்ட சிஷ்ட பரிபாலனாக ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார். அதன்படி, ஸ்ரீ மகாவிஷ்ணு, தட்சிணாயனத்தில் ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீ கிருஸ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண , கோகுலாஷ்டமி, பெருவிழா

எதிர்வரும் 25.08.2016ம் திகதி வியாழக்கிழமை ஆவணிமாத ரோஹிணி நட்சத்திர நன்நாளில் சுவிஸ் பேர்ண் தூண் மாநகரில் குடிகொண்டு அருளாட்சி புரியும் பகவான் ஸ்ரீ சீரடி சாய் பாபா சன்னிதியில் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு 25.8.216 அன்று மாலை மாலை 5.00 மணியளவில் பூர்வாங்ககிரியை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை பக்திபூர்வமான பஜனை நிகழ்வும் நிறைவாக ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

பகவானின் அவதார தினமான இப்புனித நன்நாளில் நாம் உள்ளன்புடன் சாயி சன்னிதியில் இடம்பெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றும் அவரது பிறப்பை துவாரகாமாயி எனும் கோகுலம் எப்படி கொண்டாடி மகிழ்ந்ததோ அவ்வாறே நாம் அனைவரும் ஒன்றுகூடி சாயி கிருஸ்ணனின் அவதார தினமான கோகுலாஷ்டமி நன்நாளை கொண்டாடி மகிழ்வோம்.!

ஸ்ரீ சீரடி சாயியை பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

இவ்வண்ணம்
ஸ்ரீ சீரடி சாய் பாபா சன்னிதி

முக்கிய குறிப்பு

பகவானின் அவதார தினமான இப்புனித நன்நாளில் நடைபெறும் விசேட கலச அபிசேக வழிபாட்டு நிகழ்வில் அடியவர்கள் கருவறையில் குடிகொண்டிருக்கும் சாய்நாதன் திருவுருவுக்கு நேரடியாகத் தாங்களே கலச அபிசேக அராதனைகளை மாலை 5.00 மனிமுதல் 6.00 மணிவரை மேற்கொண்டு பகவான் திருவருளை பெற்றேகும் வண்ணம் அடியவர்களாகிய உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம

Comments

தொடர்புடைய செய்திகள்