Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியாவுடன் வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

Posted On : March 10, 2017

பிரெக்சிற்கு பின்னர் பொருளாதார பாதிப்பு ஏற்படாத வகையில் பிரித்தானியாவுடன் வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக கடந்த வருடம் பிரித்தானியா தீர்மானித்தது. அதற்கேற்ப பிரெக்சிற் குறித்த சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினாலும், பிரித்தானியாவில் வசிக்கும் 27 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரெக்சிற்றால் ஏற்படும், பொருளாதார இழப்புகளை சீர்செய்ய முன்னர் பல வணிக ஒப்பந்தங்களை மறுசீரமைப்பது குறித்து பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்