Home / உலகம் / கனடா /

ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் கனேடிய பெண்கள்

Posted On : March 11, 2017

ஆண்கள் வருமானமாகப் பெறும் ஒவ்வொரு கனேடிய டொலருக்கும், பெண்கள் 87 சதங்களையே வருமானமாகப் பெறுவதாக புள்ளிவிபரவியல் ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட கனேடியர்களின் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் தொடர்பான தரவுகளில் இருந்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆன சம்பள இடைவெளி 1981ஆம் ஆண்டிலிருந்து 10 சதங்களால் குறைவடைந்துள்ளதாகத் புள்ளிவிபரவியல் சுட்டிக்காட்டியுள்ளது.

1981ஆம் ஆண்டு ஆண்கள் வருமானமாகப் பெற்ற ஒவ்வொரு டொலருக்கும் பெண்கள் 77 சதங்களே வருமானமாகப் பெற்றதாகவும் புள்ளிவிபரவியல் மேலும் கூறியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்